Posts

கொங்கதேச குலதெய்வங்களான இஸ்லாமியர்

Image
 " சகல சாஸ்திரங்களையும் கற்று இறைவனை நம்பாத ஒரு பிராமணனை விட, இறைவனை நம்பும் ஒரு கற்றறியாத மிலேச்சன் மேலானவன். அம்மிலேச்சன் சகலத்தையும் கற்றவனாகிறான்" - திருமூலர் குறிப்பிடும் லிங்க புராணம் "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" (திருவள்ளுவ நாயனார்: கடவுள் வாழ்த்து, குறள் 2) சங்க காலத்திற்கு முன்பிருந்தே மூவேந்தர் படைகளில் வீரர்களாக சாக்கியர் (Sakas, Scythian)  https://en.m.wikipedia.org/wiki/Saka எனப்படும் மிலேச்ச இனத்தவர் பணியாற்றியுள்ளனர். இன்றைய மேற்கு அப்கானிஸ்தான் பகுதியான Sistan எனும்  (சாக்கியஸ்தானம்) https://en.m.wikipedia.org/wiki/Sakastan_(Sasanian_province)  பகுதியினின்று பல்வேறு காலங்களில் வந்த இவர்கள் தற்காலத்தில் Pashtun, Pathan எனவும், தமிழில் பட்டாணி எனும் அழைக்கப்படுகின்றனர்.  மிலேச்சப்படை எனவும், அவர்தம் பாசறைகள், "மிலேச்சர் இருக்கைகள்" எனவும் அழைக்கப்பட்டன. அதி வீர குதிரைப்படை (ரவுத்து)  சூரர்களான இவர்கள் புகழ் பட்டாணி ராவுத்தர்கள் என உலகெங்கும் பிரசித்தி பெற்றது. வில், வாள் வித்தைகளில் பிரசித்தி பெற்றவர்கள். 300 படத்...