கொங்கதேச குலதெய்வங்களான இஸ்லாமியர்





 
சங்க காலத்திற்கு முன்பிருந்தே மூவேந்தர் படைகளில் வீரர்களாக சாக்கியர் (Sakas, Scythian) https://en.m.wikipedia.org/wiki/Saka எனப்படும் மிலேச்ச இனத்தவர் பணியாற்றியுள்ளனர். இன்றைய மேற்கு அப்கானிஸ்தான் பகுதியான Sistan எனும்  (சாக்கியஸ்தானம்) https://en.m.wikipedia.org/wiki/Sakastan_(Sasanian_province) பகுதியினின்று பல்வேறு காலங்களில் வந்த இவர்கள் தற்காலத்தில் Pashtun, Pathan எனவும், தமிழில் பட்டாணி எனும் அழைக்கப்படுகின்றனர். 
மிலேச்சப்படை எனவும், அவர்தம் பாசறைகள், "மிலேச்சர் இருக்கைகள்" எனவும் அழைக்கப்பட்டன. அதி வீர குதிரைப்படை (ரவுத்து)  சூரர்களான இவர்கள் புகழ் பட்டாணி ராவுத்தர்கள் என உலகெங்கும் பிரசித்தி பெற்றது. வில், வாள் வித்தைகளில் பிரசித்தி பெற்றவர்கள்.

300 படத்தில் பாரசீக மன்னர் க்ஷயர்ஷாவின் (Xerxes) தூதுவனாக மிலேச்ச சாக்கியன் (Saka Tigraxauda) பாரம்பரிய உடையில்

பட்டாணியர் முக்கோண குல்லாவுடனான உருமாலைகள்  

பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலம் புனேர் தொல்பொருள் சிற்பத்தில் இசை வாசிக்கும், நாடானமாடும் சாக்கியர் (குல்லா பார்க்கவும்)

இன்றைய பெஷாவர் குல்லா (மேல் உருமாலை கட்டப்பட்டு):
குல்லாவுடன் உருமாலைகள் 


விசுவாமித்திரரது படையினை தோற்கடிக்க வசிஷ்டரது காமதேனு பசு தனது மடியிலிருந்து உருவாக்கியவர்களே திராவிடர்களும், சாக்கியர்களும் என மகாபாரதம் கூறுகிறது. தமிழரும், சாக்கியரும் (பட்டாணியரும்) இதனால் சகோதர முறையினர்:

இவர்கள் அதி பலம் பெற்றவராதலால், முப்புரத்தாரான இவர்களை திசைதிருப்ப மாயவனால் உருவாக்கப்பட்ட மாயையே புத்தன் என சிவமகாபுராணம் குறிப்பிடுகிறது. கோதம புத்தன் இவர்களது முனிவன் ஆதலால் "சாக்கிய முனி" https://en.m.wikipedia.org/wiki/Shakamuni என்று அழைக்கப்பட்டான்.

https://indianindependenceconstitution.blogspot.com/2012/10/under-ever-watchful-eye-of-freemasons.html?m=1 பௌத்தமே "சாக்கியம்" என்று இதனால் பெயர் பெற்றது. https://en.m.wikipedia.org/wiki/Buddhas_of_Bamiyan

ஹே ராம் படத்தில் சாக்கியர் பாரம்பரிய பட்டாணி உடையில் ஷாருக் கான்

நாத்திக பௌத்தத்தினின்று, இறை நம்பிக்கையாளர்களான இஸ்லாமிய ஆத்திகப் ஒளியை ஏற்ற இவர்கள் பல சாம்ராஜ்யங்களை கட்டமைக்கும் வல்லமையைப் பெற்றனர். பாரசிகர், மராட்டியர், ஆங்கிலேயர், ரஷ்யர், அமேரிக்கர் என அனைத்து பேரரசுவாத சாம்ராஜ்யங்களும் இவர்களிடம் மோதிதான் அழிந்தனர். தாலிபான் முற்றும் இவர்களே.

பட்டாணி, பட்டாணி துருக்கர், பட்டாணி ராவுத்தர், பட்டாணி சர்தார் என்று அழைக்கப்படும் இவர்களது பாசறை கூடாரங்களை "உருது"க்கள் என அழைத்துக்கொண்டதால், அவர்களது பாசைக்கே "உருது" என பெயர் ஆனது. தமிழ்நாடு சர்க்கார் முற்பட்டோர் பட்டியலில் 33.    காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721), 59.    பத்தான் (பட்டானி), கான் (747) எண்களில் வரும் ஜாதியினர்.

இஸ்லாமுக்கு முன்னரே இங்கு சங்க காலங்களிலிருந்து படைவீரர்களாக பணியாற்றிவந்த இவர்கள், பின்னாளில் இஸ்லாமிய ஆத்திகத்தை ஏற்றனர்.

கொங்கத்தில் சேரரிடத்தே பணி செய்த இந்த மிலேச்ச வீரர்கள் பற்றி பத்துப்பாட்டு சொல்கிறது:

5. முல்லைப்பாட்டு - பாசறைக் காட்சி

புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இருப்பது முல்லைப் பாட்டு. இது ஓர் அகத்திணைப் பாட்டு - அதாவது பெயர் தெரியாத ஒரு தலைவன், தலைவி ஆகியோரிடையே உள்ள அன்புப்பிணைப்பைப் பற்றியது. அதில், முல்லை என்பது பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவியின் நிலையைக் கூறுவது. முல்லைப்பாட்டின் தலைவன் ஓர் அரசன். அவன் போர்மேல் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தில் கார்காலம் தொடங்கினால் போர் நிறுத்தப்பட்டு, இரு படையினரும் தத்தம் நாட்டுக்குத் திரும்புவர். காலையில் பயணம் தொடங்கினால் மாலைக்குள் வீடு வந்து சேருவர். ஒரு கார்காலத் தொடக்கத்து மாலை நேரத்தில் தலைவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலையுடன் காத்திருக்கும் தலைவியாகிய அரசியின் நிலையைக் காட்டும் வண்ணம் பாடல் தொடங்குகிறது. இதனைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் (103 அடிகள்)கொண்டது இப்பாடல்.

பாடலின் தொடக்கத்தில் பிரிவுத்துயரால் வாடும் தலைவியின் நிலையைக் காட்டிய புலவர், அடுத்து ஒரு பின்னோக்குக் காட்சியாக (Flash back), போர்மேற் சென்ற தலைவன் முதலில் தன் படைகளுக்கும், தனக்கும் பாசறை வீடுகளைக் கட்டிக்கொள்வதைக் காட்டுகிறார். இதில் மன்னனான தலைவனுக்குச் சிறப்பான முறையில் பலத்த கட்டுக்காவலுடன் பள்ளியறையுடன் கூடிய ஒரு படைவீடு மிலைச்சரால் சிறப்பாக அமைக்கப்படுவதைப் புலவர் நன்கு விரித்துக் கூறுகிறார்.

 1. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை

2. மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து

3. வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்

5. திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்

6. எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்

7. உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

8. படம் புகு மிலேச்சர் உழையர் ஆக - முல் 59 - 66

 1,2,3. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை,மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - கசை என்கிற சாட்டை சுற்றிய, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும், சட்டையையும் அணிந்த அச்சம் வரும் தோற்றத்தையும், வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

 4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் - புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரிப்பு சிறப்பாக அமையப்பெற்ற அழகிய நல்ல குடிலில்,

 5. திரு மணி விளக்கம் காட்டி - அழகுடைய மாணிக்க மணி விளக்கை எரியவைத்துத்,

5,6 திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - திண்ணிய கயிற்றில் திரைச்சீலையை வளைத்த இரு அறைகள் உள்ள படுக்கை அறையுள்,

7,8 உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக -

உடம்பை ஆட்டிச் சைகையினால் பேசும், பேசாத நாவினையுடைய சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக -

பாசறையின் மற்ற பகுதிகளையெல்லாம் மன்னனின் படைவீரர் அமைக்க, மன்னன் தங்குமிடத்தை மட்டும் மிலேச்சர் கட்டினர் என்று புலவர் கூறுகிறார். 


கொங்கத்திலும், தென் கர்நாடகத்திலும், கேரளத்திலும் நேரடி இஸ்லாமிய ஆட்சிமுறை எப்போதுமே இருந்ததில்லை எனத்தனிச்சிறப்புப் பெற்றிருப்பினும்: https://konguhistory.blogspot.com/2007/09/blog-post.html?m=1, படைகளில் இவர்கள் பலர் கொங்கருக்காகப் போரிட்டு வீர மரணம் எய்தியும், ஒற்றறாகவும், மாந்திரீகங்கள் செய்தும் இறைநிலை அடைந்தனர். 



தீரன் சின்னமலையின் சுதந்திரப்போர் 1799-1801இலும் பதேஹ் முஹமத்

 فتح محمد, முஹமத் ஹாஷம் 

محمد ہاشم, ராமானுல்லாஹ் கான்   رامان اللہ خان ஆகியோர் கொங்கதேசத்தின் சுதந்திரப்படைகளின் தளபதிகளாக இருந்தனர்:https://archive.org/details/SouthIndianRebellion/page/n114/mode/1up

கோவை கூட்டணி தீரனுக்கும், சேலம் கூட்டணி பரமத்தி வேலூர் அப்பாச்சிக்கவுண்டருக்கும், திண்டுக்கல் கூட்டணி விருபாட்சி கோபால நாயக்கருக்கும் தென்னிந்திய விடுதலை வீரர்களுக்கும் இணைப்புப்பாலமாகச்  செயல்பட்டவர் தோண்டியா வாக் (எ) நவாப் மாலிக் ஜஹான் பஹாதுர் முன்ஷேர் கான்: 

نواب ملک جہاں بہادر منصیر خان

https://en.m.wikipedia.org/wiki/Dhondia_Wagh

மேற்கண்ட கூட்டணி பற்றி முனைவர் ராஜய்யன் கும்பினி Board of Revenue ஆவணங்களில் இருந்து எடுத்து எழுதிய நூலிலிருந்து:


https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

பிரான்சிஸ் புக்கனான் என்ற சமகால (1800) கும்பினியான் பயணக்குறிப்புகளில்:

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214

கொங்கர்தம் குலதெய்வங்களில் இஸ்லாமியரானவர்களில் முக்கியமானோர்:

  1. அப்பச்சிமார் படை வீரர் தனுக்காமன் (தானு கான்)
  2. அவரது சகோதரரான அப்பச்சிமார் படை வீரர் வாதுருகார் (பஹாதுர் கான்)
  3. தனுக்காமன், வாதுருகார் தாயாரான மாந்திரீகத்தில் சிறந்த மசரி அம்மன் (மஸரி)
  4. காகம், காஞ்சிகோயில் கன்ன கோத்திரத்தார் மற்றும் காஞ்சிகோயில் செம்ப கோத்திரத்தார் குலதெய்வமான டில்லி பட்டாணி ராவுத்தமார் சாமி
  5. ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்  துலுக்கண்ணன்
  6. பஞ்சாபி சிப்ரா ஜாட் ஜாதியில் பிறந்த டீபு சுல்தான் கொடுத்த ஆவ் ஜீ மரியாதை
  7. காடையூர் சர்தார்
  8. அண்ணமார் காலத்து ராஜராஜ சோழன் படையில் பட்டாணியர்
  9. கொளாநெல்லி துலுக்கண சாமி
  10. வட்டூர் துலுக்கணர் சாமி
  11. பணிமலைக்காவலர் கோயில் பங்கடு சுல்தானும், துலுக்கப்பூசாரியும்
இஸ்லாமியர் மதிக்கும் கொங்கர் கோயில்:
  1. சேரமான் பெருமாள் நாயனார்
  2. பழனி பாவா

    ஆகியோர்.


    1,2&3. மசரி அம்மன் (பேச்சி அம்மன்), தனுக்காமன், வாதுருகார்:

    திங்களூர் சின்ன அப்பிச்சிமார் மடத்தில் மசரி அம்மன் சன்னிதி
    பூசாரி: காட்டு வேட்டுவக்கவுண்டர்
    குருத்துவம்: பட்டையக்காளிபாளையம் மடம் (சைவப்பிள்ளைமார் தேசிக ஓதுவார்)


    சிங்காநல்லூர் பெரிய அப்பிச்சிமார் மடத்தில் மசரி அம்மன் சன்னிதி, பூசாரி: வேந்த வேட்டுவக்கவுண்டர்

    குருத்துவம்: பட்டையக்காளிபாளையம் மடம் (சைவப்பிள்ளைமார் தேசிக ஓதுவார்)




    வெள்ளோடு ராசா கோயில் மசரியம்மன்
    பூசாரி: வெள்ளோடு புலவர்பாளையம் தென்முகம் சாத்தந்தை கோத்திர சபைப் புலவனார்கள்
    ஸ்தானிகம்: மூவேந்திர பண்டிதர்


    திடுமல் மசரியம்மன் (பேச்சியம்மன்)
    பூசாரி: காட்டு வேட்டுவக்கவுண்டர்
    குருத்துவம்: நஞ்சை இடையாறு மடம் (கிராமிய ஆதி சைவர்)


    இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டுப் பிள்ளைக்கரையாற்றூரில் அன்று புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர் சமூக வாலிப வயதுப் போராளிகள் , ஆவணிப்பேரூர் பூவாணிய நாட்டுப் பொத்தி என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டு கொங்க வெள்ளாள நாட்டுக்கவுண்டர்களுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் அருகே ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் வீரமாசதியாக உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது.

    மசரி مصری என்ற இசுலாமிய பெண்ணின் மகன்களான தனுக்காமன் ( تعانق خان, தானு கான்), வாதுருகார் (بہادر خانபஹாதுர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர்.

    தென்முகம் வெள்ளோடு ராசா சுவாமி கோயில் மற்றும் சிங்காநல்லூர், திங்களுர், திடுமல் அப்பிச்சிமார் மடங்களில் மசரி அம்மன் பேய்களை ஓட்டும் மாந்திரீகத்தில் சிறந்தவளாகவும், மக்கள் இருவரும் சேர்த்து வணங்கப்படுகின்றனர்.

    எழுபது வேட்டுவர்களும், அவர்கள் தகந்பன்மாரான அப்பிச்சிமாரும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களது தாயான மசரி அம்மனுக்குத் தனியாக ஆடு, சேவல் மிருகபலி கொடுக்கப்படுகிறது.

    கொங்க வெள்ளாளரில் மேல்கரைப் பூந்துரை நாட்டார், காஞ்சிக்கோயில் மொளசி கன்ன கோத்திர நாட்டார்,  பெருந்தாலி வேட்டுவர் மற்றும் பல சமூகத்தினர் குலதெய்வங்களாக இவர்கள் உள்ளனர். அப்பிச்சிக்கவுண்டர், மாரப்பகவுண்டர், ராக்கியணக்கவுண்டர், மாராயி, மசரி என்று பெயரும் இடுகின்றனர். இஸ்லாமியரும் 'ஔலியா' என்று வெளியில் நின்று தொழுகின்றனர்.

    அப்பிச்சிமார் காவியம்:

    https://archive.org/details/appichimar/page/n51/mode/2up?view=theater

    https://appichimarhistory.blogspot.com/2021/01/blog-post.html?m=1

    4. ராவுத்தமார் சாமி


    காகம் ராவுத்தமார் கோயில்
    பூசாரி: காகம் கன்ன கோத்திரத்தார்
    ஸ்தானிகர்: காகம் கிராமிய ஆதிசைவர்
    புகைப்படங்கள் மற்றும் செய்தி:

    https://www.thehindu.com/society/history-and-culture/a-secular-temple-in-the-heart-of-kongu-nadu/article24103046.ece/amp/

    காஞ்சிக்கோயில் பள்ளபாளையம் ராவுத்தமார் கோயில்
    பூசாரி: காஞ்சிக்கோயில் பள்ளபாளையம் கன்ன கோத்திரத்தார்
    குருத்துவம்: சிவகிரி மடம் (கிராமிய ஆதிசைவர்)

    காஞ்சிக்கோயில் நாட்டாரான செட்டிபாளையம் செம்ப கோத்திரத்தாரும், காஞ்சிகோயில் கன்ன கோத்திரத்தாரும்  போரில் ஒட்டுமொத்தமாக இறந்துவிட, இறைவன் அருளால் டில்லிப் பட்டாணி ராவுத்தர் دہلی پٹھانی راوت ஒருவர் தோன்றி புகை போட்டு அவர்களை எழுப்பி வெற்றி பெறச்செய்தார். 


    அவருக்காக காகத்தில் கன்ன கோத்திரத்தார் ஒரு கோயிலும், காஞ்சிகோயிலில் செட்டிபாளையம் செம்ப கோத்திரத்தார் தனியே ஒன்றும், காஞ்சிகோயில் கன்ன கோத்திரத்தார் பள்ளபாளையத்தில் ஒன்றும் என மூன்று ராவுத்தமார் கோயில்கள் குலதெய்வங்களாக உள்ளன. நாட்டுப்பட்டக்காரரான செட்டிபாளையத்தார் வீட்டில் பேழையில் சாமி வைக்கப்பட்டு, வருடம் ஒருமுறை காஞ்சிகோயில் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இன்று அதனை அங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டனர். 

    ராவுத்தருக்கு கஞ்சா புகை, ஆடு, கோழி படைக்கப்படுகின்றன.

    ராவுத்தாக் கவுண்டர், ராவுத்தண கவுண்டர், ராவுத்தாயி என்று பெயர்கள் இட்டும் வருகின்றனர்.

    5. துலுக்கண்ணன் வம்சம்



    ராசிபுரம் அத்தனூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோயிலில் அம்மனுக்குத் தலைவணங்கி, தலையில் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது துலுக்கண்ணன் அளித்த அம்மன் குதிரை வாகனம்
    பூசாரி: சோழிய வெள்ளாள புலவனார்
    ஸ்தானிகம்: கல்லங்குளம் மடம், சிவாலய ஆதிசைவர் (கிராமிய ஆதி சைவர்கள்)

    வல்வில் ஓரி வம்சமான ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்களது முன்னோர்கள் ஒருவரது குழந்தையை, குழந்தையில்லாத டீபு  சுல்தானது இஸ்லாமிய அதிகாரி தத்து எடுத்து வளர்த்தார். துலுக்கரை ஸ்வீகார அண்ணனாக (தந்தையாக) கொண்டதால் துலுக்கண்ணன் வம்சம் எனப்பெயர் பெற்றனர். 


    6. 'ஆவ் ஜீ'


    டீபு சுல்தான் 
    ٹیپو سلطان سلطان فتح علی صاحب ٹیپو"ஆவ் ஜீ" என்று அழைத்தது, இன்றுவரை பட்டப்பெயராகப் பத்திரிக்கைகளிலும் "ஆவுச்சி" எனத்தொடர்கிறது.

    ராசிபுர நாட்டுக்கவுண்டரான வெளிய கோத்திரத்து அகளங்க பட்டக்காரரது தம்பி ஒருவர், பருத்திப்பள்ளி செல்ல கோத்திர நாட்டுக்கவுண்டரான முதலிக்கவுண்ட பட்டக்காரர் மகளை கல்யாணம் செய்தார். அவருக்கு மாமனார் தனது நாட்டில் ஒரு பகுதியை 'மல்லசமுத்திரம் நாடு - மல்லை நாடு' எனப் பிரித்து வழங்கினார். மருமகன் வீரதீரங்களால் 'தொண்டைமான்' எனப் பட்டம் பெற்றார். அப்போது வேட்டுவர் ஒருவர் தனது கொடியை நட்டார். உடனே மூத்தவரான ராசிபுரத்தாரிடம் தம்பி உதவி கோர, அவர் வேட்டுவரை தோற்கடித்து, ரத்தம் சொட்டச்சொட்ட தங்கள் இருவருக்கும் நடுவில் பிடித்து டீபுவிடம் அழைத்துச்சென்றனர்.  பஞ்சாபி சிப்ரா ஜாட் ஜாதி இஸ்லாமியரான டீபு சுல்தான், நாட்டு அதிகாரிகளாக இருந்த ராசிபுரத்தாரின் வீரத்தை மெச்சி, எழுந்து நின்று, இவர்களை மட்டும் உருதுவில் "ஆவ்" آؤ (வா) என்று பிறரை அழைப்பது போல அழைக்காமல், "ஆவ் ஜீ" آؤ جی  (வாங்கோ)



    என்று மரியாதையுடன் அழைத்ததால், இன்றும் இக்கோத்திரத்தாரைப் பிறர் "ஆவுச்சி" ஏன்றே அழைக்கின்றனர்.

    7. காடையூர் சர்தார்:







    காடையீஶ்வரர் கோயிலில் உள்ள வரலாற்றுப் பதிவுகள்
    குருத்துவம்: காடையூர் மடம் (கிராமிய ஆதிசைவர்)

    தங்களது முப்பாட்டி பத்தினி வெள்ளையம்மாளை கேவலப்படுத்தி ஏமாற்ற நினைத்த அவளது பிறந்த வீட்டாரான நட்டூர் சேட கோத்திரத்தாரிடம் நியாயம் கேட்க உதவிய சர்தாருக்கு سردار நன்றிக்கடனாக, காடையூர் பிறழந்தை கோத்திர காங்கய நாட்டுக்கவுண்டர்கள், இன்றும் இஸ்லாமிய சுன்னத் போன்று "முழுக்காது சீர்" என்ற காதுகுத்து சீரினை குலகுரு ஆலோசனைப்படி நடத்துகின்றனர். இதனால், அக்குலத்தவரே முழுக்காதர் என்றழைக்கப்படுகின்றனர். இந்தச்சீர் செய்தவர் அனைவரும் அருமைச்சீர் வைத்தவர்களாகக் கருதப்படுவர். தெற்கு, மேற்குத்தலைவாசல் ஆறு நாடுகளில், இந்த காடையூர் முழுக்காது பெறழந்தை கோத்திரத்தார் மட்டுமே அருமைக்காரர்களாகத் தகுதியுள்ளோராவர்.

    நடிகர் சிவகுமார் குடும்பத்தார், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவரும் இவ்வாறு இஸ்லாமிய சர்தாருக்கு நன்றிக்கடனாக, அவர் நினைவாக சுன்னத் சீரைத் தழுவிய முழுக்காது சீர் செய்தவர்களாவர்.

    8. அண்ணாமார் காலத்து ராஜராஜ சோழன் படையில் பட்டாணி ராவுத்தர்



    சிவசோழன் (ராஜராஜன்) படையிலும் "பட்டாணி ராவுத்தன்மார்" போர்த் தளபதிகளாக, வீரர்களாக பணியாற்றியதாக அண்ணமார் சுவாமி கதை தெரிவிக்கிறது.

    https://archive.org/details/AnnamarswamiKathai/page/n90/mode/1up?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF

    9. கொளாநல்லி துலுக்கண சாமி
    கொளாநல்லி பொன் குழலி அம்மன் கோயில் கருப்பண சாமி சன்னிதி அருகே துலுக்கண சாமி சன்னிதி


    பூசாரி: கொங்க கோரக்க வம்ச பண்டாரம்

    கொளாநல்லி கன்ன கோத்திரத்தாருக்கு ஒரு இஸ்லாமியர் பேருதவி செய்ததால், அவரைத் 'துலுக்கண சாமி' என்று வணங்கி வருகின்றனர். 'துலுக்கண கவுண்டர்' எனப்பெயரும் இடுகின்றனர்.
     (ஆதாரங்கள் : 1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.
    2. கொங்குநாடு (1934) தி.சு.முத்துசாமிக் கோனார், பக்கம்-90.)

    10. வட்டூர் கவுண்டம்பாளையம் துலுக்கணர் சாமி

    வட்டூர் கவுண்டம்பாளையத்திலும் ஒரு துலுக்கணர் சாமி 

    வட்டூர் கவுண்டம்பாளையத்திலும் ஒரு துலுக்கணர் சாமி அருள் பாலிக்கிறார்.


    11. திருச்செங்கோடு பணிமலைக்காவலர் 
    கோயில் பங்கடு சுல்தானும், துலுக்கப் பூசாரியும்

    திருச்செங்கோடு பணிமலைக்காவலர் கோயில்

    பூசாரி: திருவாடுதுறை ஶ்ரீ கருணீகர்
    ஸ்தானிகம்: திருச்செங்கோடு நாககிரிப் பண்டிதர் (அலகு ஆதிசைவர்)

    திருச்செங்கோடு கோயிலைத் தாக்க வந்த படைகளை, ஓவணன், வீமணன், ரங்கணன் என மூவர் காத்து நின்றனர். இவர்களிடம் தோற்ற பங்கடு சுல்தான், சரணடைந்து அங்கு சமாதியாக உள்ளார். இதனால் கன்னிவாடி, கண்ணனூர், பழமடம் காணிகன்ன கோத்திரத்தாருக்குக் கட்டளைப் பூசாரியான இப்பூசாரிக்கே ஏறருள்முத்து துலுக்கப்பூசாரி என்று பெயர் வந்தது. இஸ்லாமியரும் இந்த சமாதியை ஒரு 'ஔலியா'வாக மதித்துத் தொழுகின்றனர். (ஆதாரம்: பணிமலைக்காவலர் பட்டயம், கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், 2005, புலவர் செ.ராசு)



    1. சேரமான் பெருமாள் நாயனார்


    சேரமான் கயிலை செல்லல் - தஞ்சை பெரிய கோயில் சோழர் ஓவியம்

    சேரமான் பெருமாள் நாயனார் தனது கொங்கதேசத்தை கரூவூரிலிருந்து ஆண்டார். இறுதியில் பூந்துறையில் தனது நாட்டினை சுந்தரருக்கு அளித்து கயிலை சென்றார். பூந்துறையில் சாகாடை கோத்திரத்தில் தனது பிரதானியாக இருந்த நன்னாவுடையானை http://kongupattakarars.blogspot.com/2011/03/1.html?m=1 கொங்கதேசத்தின் தலைமைப் பட்டக்காரராகவும், அதேபோல அவரது வம்சத்தில் வந்த 'பூந்துறைக்கோன்' ஸ்வாமி திரி திருமூலப்பாடு குன்றலைக்கோனாத்திரி  https://en.m.wikipedia.org/wiki/Zamorin#Etymology என்பவரை மலையாள, கேரள தேசங்களுக்குத் தலைமை சாமந்தனாகவும் பட்டம் சூட்டிச்சென்றார். சுந்தரரும் ஆதி சைவருக்கு அளித்துத் தொடர்ந்தார். மலையாள இஸ்லாமியர், அவர் மெக்காவை அடைந்ததாகக் கொள்கின்றனர். குக்குடேச் சுர மக்கீச்சுரம் 6-71-8 என்று அகர வரிசை தேவார வைப்புத்தலங்களில் 232வது தலமாப் பாடப்பெற்றுள்ளதனை ஒப்பு நோக்குக: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0196.html#dt6071

    ஆறாம் திருமுறை:

    6.71 பொருப்பள்ளி வரைவில்லாப்

    நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்

    சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான

    கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்

    குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்

    ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்

    அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்

    ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்திஇ

    றைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.   8 

    எனவே சேரமான் கயிலை அடைந்ததனை அன்று ஏமன் நாட்டு வணிகர்களாக மலையாளத்தில் இருந்த சோனக ஷாஅஃபி மத்ஹப் மாப்பிள்ளை இஸ்லாமியர்,  மக்காவை அடைந்ததாகவே போற்றுகின்றனர். மேலும் தங்களுக்கென சேரமான் ஒரு பள்ளிவாசலை மலையாள ஆகம கட்டிடக்கலைப்படி கட்டிக்கொடுத்ததாகப் பெருமையுடன் காட்டுகின்றனர்:

    சேரமான் பெருமாள் பள்ளிவாசல் (பழைய படம்)

    கயிலையையும் மக்காவையும் தேவார அப்பர் சுவாமிகளும், மலையாளச் சோனக மாப்பிள்ளை இஸ்லாமியரும் இறைவனின் இருப்பிடங்களாக வேறுபாடுகள் இன்றிப் போற்றியுள்ளனர்.

    ஏமன் நாட்டிற்கு ஷாஅஃபி أَبُو عَبْدِ ٱللهِ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ ٱلشَّافِعِيُّ காலத்தில் ஷாஅஃபி மத்ஹப் பரப்பிய காலம்: 767 - 820 கிறித்தவ வருடம்

    https://en.m.wikipedia.org/wiki/Al-Shafi%27i

     சேரமான் காலம்: 825 கிறித்தவ வருடம்

    கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்

    கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்

    லைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை

    மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே

    வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

    (கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே கருதினர் . கொங்கு நாடு தான் சேர நாடு

    'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,
    ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா
    ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே.'

     - (திருப்புகழ் - பழநி) 

    அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் . கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.


     14. இப்ராஹீமின் சுரா

    4:14 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
    14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவரவர் மொழியிலேயே போதிக்கும் படி நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

    "ஆதியாகி அந்தம் நடுவாகி அல்லானே"

    "அன்பருக்கன்பனே யாவையுமாம் அல்லையுமாம்" 

    - மாணிக்கவாசகர் சிவபுராணம்

    இறைவனின் அரு உருவை "அல்லான்", "அல்லை" என்பதனை நோக்குக. இஸ்லாமியர் வடிவற்ற இறைவனை அல்லாஹ் என்பதனையும் நோக்குக.

    மேலும் சிவனைக் காலகாலன் (காலமற்றவன்), த்ருதிமதே (நிலைத்த பொறுமையாளன்) என்பது போலவே குரான் அல்லாஹ்வை

     اَلصَّبُورُ அல்-சபூர் (காலமற்றவன்) என 99வது உச்சபட்சப்பெயராக வழங்குகிறது. சபூரை வணங்குவோர் சபியூன் எனச் சைவர்களுக்கு அரபியில் பொருளாகிறது.

    குரானிலும் சைவர்கள் பற்றி 'சப்யுன்' பற்றிக் குறிப்புகள் உள்ளன.


    இமய மலையின் மேற்கு எல்லையான கோராசான் பகுதியில் ஜன்னத் (சொர்க்கத்திலிருந்து) விழுந்ததான அஸ்வத் கல். சிவ லிங்கத்திற்குப் போலவே பாரம்பரிய பராமரிப்பாளர் குடும்பங்களால் அபிசேகம், தூபங்கள் செய்யப்படுகிறது. அல்லாஹ்வின் வலது பகுதி  (يمين الله யமீன்-அல்லாஹ்) என முகமது நபி கூறியுள்ளார்:
    அஸ்வத் கல்லுக்கு எதிர்திசையில் உள்ள 
    ஆவுடையாரை ஒத்த சாஅத் கல்.

    காபாவை அப்பிரதட்சிணம் செய்கையில் உடுத்தப்படும் தைக்கப்படாத வேட்டி, துண்டு:


    குரான் சுரா: 2. பசு மாட்டின் சுரா வசனம்: 62

     اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

    2:62. இறை நம்பிக்கை  கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் (சைவர்கள்) நிச்சயமாக எவர் இறைவன் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு  நல்ல காரியங்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    குரான் சுரா:  5. ஆகாரத்தின் சுரா  

    வசனம்: 69 

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِــٴُــوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

    5:69. ஓரிறையாளர்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும் (சைவர்கள்), கிறிஸ்தவர்களிலும் எவர்கள் இறைவன் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    குரான் சுரா:  22. புனிதப்பயணத்தின் சுரா 
    வசனம்: 17
      اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَ الصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا ۖ  اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏

    22:17. திடனாக, நம்பிக்கை கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும் (சைவன்களாகவும்), கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் (பாரசிக பூசாரி மதத்தவர்) ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக இறைவன் இறுதி நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.

    இதனால்தான் நாத்திகர்களான (காபிர்கள்) பௌத்த, சமணர்களை குறி வைத்து மாற்றிய இஸ்லாமிய அரசுகள், சைவர்களை ஆத்திக இறை நம்பிக்கையாளர்கள் எனக்கருதினர். யூதர், கிறித்தவர் போன்றே சைவர்களை 'திம்மி' அந்தஸ்து அளித்து, ஜிஸியா வரி மட்டும் விதித்து கோயில்களில் உண்டியல் (ஹுண்டவி) வைத்தனர்.

    2. பழனி பாவா


    முருகனின் ஷட்கோண சக்கர யந்திரம் - இஸ்ரேல் கொடி தாவூதின்  நட்சத்திரம்:

    பழனி மலை குருத்துவம்: தவராஜ பண்டிதர் (அலகு ஆதிசைவர்)
    ஸ்தானிகம்: 4 பட்ட அலகு ஆதிசைவர், புலிப்பாணி பாத்திர உடையார் மடம் (தொண்டை மண்டல வெள்ளாளர்)

    இதே போல இஸ்லாமியர்களும், பழனி முருகனை தாவூத் நபி http://hakkem.blogspot.com/2011/03/blog-post.html?m=1 என போற்றி கோயிலுக்குப் பின்புறம் உள்ள சிறிய கதவிற்குள் உள்ள மண்டபத்தில் சர்க்கரை போட்டு இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றனர். இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்குப் "பழனி பாவா" என்று இறைவன் பெயரை சூட்டுகின்றனர். பழனி முருகன் வதைத்த தாரகாசுரன்தான் ஜாலூத் என்கின்றனர்.

    "Curiously enough, Musalmans also believe in the efficacy of prayer to this shrine. Ravutans go to the little door at the back (east) of it and make their intercessions and offer sugar in the mantapam immediately inside this. They explain their action by saying that a Musalman fakir, called Palni Bava, is buried within the shrine." 

    பழனி முருகன் மீது இஸ்லாமியர் இயற்றிய இலக்கியங்கள்:

    பழனியாண்டவர் பாமாலை - புலவர் காதர் மொய்தீன் மஸ்தான்

    பழனியாண்டவர் வழிநடைச் சிந்து (1909) - தாராபுரம் என். காதர் முகைதீன் ராவுத்தர்

    பழனியாண்டவர் தல வரலாறு - என்.கே.முகம்மது ஷரீப்

    மதுரை ஜில்லா கெஜட்டியர் (1906): https://archive.org/details/madurafrancis01madr/page/307/mode/1up

    Comments