கொங்கதேச குலதெய்வங்களான இஸ்லாமியர்
சங்க காலத்திற்கு முன்பிருந்தே மூவேந்தர் படைகளில் வீரர்களாக சாக்கியர் (Sakas, Scythian) https://en.m.wikipedia.org/wiki/Saka எனப்படும் மிலேச்ச இனத்தவர் பணியாற்றியுள்ளனர். இன்றைய மேற்கு அப்கானிஸ்தான் பகுதியான Sistan எனும் (சாக்கியஸ்தானம்) https://en.m.wikipedia.org/wiki/Sakastan_(Sasanian_province) பகுதியினின்று பல்வேறு காலங்களில் வந்த இவர்கள் தற்காலத்தில் Pashtun, Pathan எனவும், தமிழில் பட்டாணி எனும் அழைக்கப்படுகின்றனர். மிலேச்சப்படை எனவும், அவர்தம் பாசறைகள், "மிலேச்சர் இருக்கைகள்" எனவும் அழைக்கப்பட்டன. அதி வீர குதிரைப்படை (ரவுத்து) சூரர்களான இவர்கள் புகழ் பட்டாணி ராவுத்தர்கள் என உலகெங்கும் பிரசித்தி பெற்றது. வில், வாள் வித்தைகளில் பிரசித்தி பெற்றவர்கள். 300 படத்தில் பாரசீக மன்னர் க்ஷயர்ஷாவின் (Xerxes) தூதுவனாக மிலேச்ச சாக்கியன் (Saka Tigraxauda) பாரம்பரிய உடையில் பட்டாணியர் முக்கோண குல்லாவுடனான உருமாலைகள் பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலம் புனேர் தொல்பொருள் சிற்பத்தில் இசை வாசிக்கும், நாடானமாடும் சாக்கியர் (குல்லா பார்க்கவும்) சங்க க...