கொங்கதேச குலதெய்வங்களான இஸ்லாமியர்












 "சகல சாஸ்திரங்களையும் கற்று இறைவனை நம்பாத ஒரு பிராமணனை விட, இறைவனை நம்பும் ஒரு கற்றறியாத மிலேச்சன் மேலானவன். அம்மிலேச்சன் சகலத்தையும் கற்றவனாகிறான்" - திருமூலர் குறிப்பிடும் லிங்க புராணம்

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"
(திருவள்ளுவ நாயனார்: கடவுள் வாழ்த்து, குறள் 2)

சங்க காலத்திற்கு முன்பிருந்தே மூவேந்தர் படைகளில் வீரர்களாக சாக்கியர் (Sakas, Scythian) https://en.m.wikipedia.org/wiki/Saka எனப்படும் மிலேச்ச இனத்தவர் பணியாற்றியுள்ளனர். இன்றைய மேற்கு அப்கானிஸ்தான் பகுதியான Sistan எனும்  (சாக்கியஸ்தானம்) https://en.m.wikipedia.org/wiki/Sakastan_(Sasanian_province) பகுதியினின்று பல்வேறு காலங்களில் வந்த இவர்கள் தற்காலத்தில் Pashtun, Pathan எனவும், தமிழில் பட்டாணி எனும் அழைக்கப்படுகின்றனர். 
மிலேச்சப்படை எனவும், அவர்தம் பாசறைகள், "மிலேச்சர் இருக்கைகள்" எனவும் அழைக்கப்பட்டன. அதி வீர குதிரைப்படை (ரவுத்து)  சூரர்களான இவர்கள் புகழ் பட்டாணி ராவுத்தர்கள் என உலகெங்கும் பிரசித்தி பெற்றது. வில், வாள் வித்தைகளில் பிரசித்தி பெற்றவர்கள்.

300 படத்தில் பாரசீக மன்னர் க்ஷயர்ஷாவின் (Xerxes) தூதுவனாக மிலேச்ச சாக்கியன் (Saka Tigraxauda) பாரம்பரிய உடையில்



பட்டாணியர் முக்கோண குல்லாவுடனான உருமாலைகள்  

பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலம் புனேர் தொல்பொருள் சிற்பத்தில் இசை வாசிக்கும், நாடானமாடும் சாக்கியர் (குல்லா பார்க்கவும்) சங்க காலக்குறிப்புகளில் வரும் உடைகளுடன்





நாகூர் தர்காஹ்வின் தலைமை கலீஃபா பாரம்பரிய முக்கோண சாக்கிய குல்லாவோடு

இன்றைய பெஷாவர் குல்லா (மேல் உருமாலை கட்டப்பட்டு):
குல்லாவுடன் உருமாலைகள் 


விசுவாமித்திரரது படையினை தோற்கடிக்க வசிஷ்டரது காமதேனு பசு தனது மடியிலிருந்து உருவாக்கியவர்களே திராவிடர்களும், சாக்கியர்களும் என மகாபாரதம் கூறுகிறது. தமிழரும், சாக்கியரும் (பட்டாணியரும்) இதனால் சகோதர முறையினர்:

இவர்கள் அதி பலம் பெற்றவராதலால், முப்புரத்தாரான இவர்களை திசைதிருப்ப மாயவனால் உருவாக்கப்பட்ட மாயையே புத்தன் என சிவமகாபுராணம் குறிப்பிடுகிறது. கோதம புத்தன் இவர்களது முனிவன் ஆதலால் "சாக்கிய முனி" https://en.m.wikipedia.org/wiki/Shakamuni என்று அழைக்கப்பட்டான்.

https://indianindependenceconstitution.blogspot.com/2012/10/under-ever-watchful-eye-of-freemasons.html?m=1 பௌத்தமே "சாக்கியம்" என்று இதனால் பெயர் பெற்றது. https://en.m.wikipedia.org/wiki/Buddhas_of_Bamiyan

ஹே ராம் படத்தில் சாக்கியர் பாரம்பரிய பட்டாணி உடையில் ஷாருக் கான்

நாத்திக பௌத்தத்தினின்று, இறை நம்பிக்கையாளர்களான இஸ்லாமிய ஆத்திக ஒளியை ஏற்ற இவர்கள் பல சாம்ராஜ்யங்களை கட்டமைக்கும் வல்லமையைப் பெற்றனர்.

 

தங்களது சாக்கிய முன்னோர் எழுப்பிய நாத்திக (காஃபிர்) பௌத்த சிலைகளை நாயன்மார், ஆழ்வார்கள் போல் தூளாக்கியதால் ஆதிக்க நாடுகளை வென்றது ஆத்திக தாலிபான்.

பாரத வர்ஷத்தின் வடக்கில் விக்கிரமாதித்தன் செய்த சாக்கிய சமண கழுவேற்றம், பள்ளிகள் இடிப்பைத் தெற்கில் நாயன்மார், ஆழ்வார்கள் செய்தனர்.

ஆயினும் அதனைத் தொடர்ந்து நடத்தி முடித்தது பட்டாணியரே.

சாக்கிய பௌத்தனது வம்சத்தில் பிறந்து இஸ்லாமிய ஆத்திகத்தை ஏற்று நாத்திக (காஃபிர்) சாக்கிய சமண, பௌத்தத்தினை வீழ்த்திய சில இறைநேசர்கள்:

குத்புத்தீன் அய்பக்கின் சமணப்பள்ளிகள் தகர்ப்பு:

பௌத்த விஹாரம்:


பக்தியார் கல்ஜியின் பௌத்தப்பள்ளிகள் (விஹாரங்கள) தகர்ப்பு:

முகலாயர் வரும்முன் வரையில், இவ்வாறான சமண - பௌத்த நாத்திகப் பள்ளிகள் தர்காக்களாக மாற்றப்பட்டு, அம்மதத்திலிருந்த தங்கள் சக சாக்கியரை, இஸ்லாமுக்கு மாற்றினர். இவர்களை அன்றைய அப்பாஸிய கலீஃபாக்கள் அங்கீரத்து வழிநடத்தினர்.

இதனையே சாக்கிய யூத பிரீமேசன் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கமான இண்டியா சர்க்காரது RSS பாஜக, "இந்து கோயில் இடிப்பு, கத்திமுனை மதம்மாற்றம்" என்று நம் சைவர்களை ஏமாற்றும். யூத அடிமை வஹாபிகளும் இதற்கு ஒத்து ஊதுவார்கள். இதுவே ஆத்திகர்களைப் பிரித்தாளும் சூழச்சி.

இவ்வாறான பட்டாணியரை வீழ்த்தி, சாக்கிய யூத (யஜூஜ் வ மஜூஜ் Ashkenazi Jew) ஃபிரீமேசன் கிழக்கிந்தியக் கம்பெனிகளுடன் இணைந்து கூறுபோட்டுக் கொள்ளையடிக்க , குரானுக்கு விரோதமாகச் சைவக் கோயில்களை கைவைத்துப் பகையைத் தூண்டிய சிறுபான்மையினரான வந்தேறி முகலாயர் (மங்கோலியர்): 
அப்கான் அமீரது வாக்குமூலம்:
"Why the Emir should want to become a Mason, or how he came to learn 
anything about Freemasonry, Sir Henry was never able to discover. All the 
Amir ever admitted was that he had met good men who were Masons. He 
knew Freemasonry to be a good thing and wanted to enter it and knew 
something about operative Masonry was evident from the facility with which 
he recognised the various Freemasons marks on the stones of the old Moghul 
Emperors’ tombs and places that they visited; such as those of the Emperor 
Akbar at Fattepur Sikri; of the Emperor Humayun at Delhi and others."
இவர்கள் அன்றைய உத்மானிய கலீஃபாக்களை  வழிகாட்டுதலை ஏற்கவில்லை.

மேற்கண்டோரைப்போலவே பிரெஞ்சு ஓரியன்டல் யூத ஃபிரீமேசன் லாட்ஜான ஜெகோபின் கிளப்பின் அடிமையாக இருந்த வந்தேறி பஞ்சாபி ஜாட் (சாக்கிய) வம்ச சிறுபான்மையினனான டீபு சுல்தான்:

பாரசிகர், மராட்டியர், ஆங்கிலேயர், ரஷ்யர், அமேரிக்கர் என அனைத்து பேரரசுவாத சாம்ராஜ்யங்களும் இவர்களிடம் மோதிதான் அழிந்தனர். தாலிபான் முற்றும் இவர்களே:


சாக்கிய யூத பிரீமேசன் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கமான பாகிஸ்தானின் தாருல் உலூம் ஹக்கானியா தேவ்பந்திக்களால் தாலிபானின் தலைமை உருவாக்கப்பட்டது. ஆயினும் சாமானிய தாலிபான் வீரர்கள் அனைவரும் ஏதோ ஒரு பாரம்பரிய சில்சிலா வழியாகப் பரேல்வியாகவே ஆன்மீக வாழ்வில் உள்ளனர்.

பட்டாணி, பட்டாணி துருக்கர், பட்டாணி ராவுத்தர், பட்டாணி சர்தார் என்று அழைக்கப்படும் இவர்களது பாசறை கூடாரங்களை "உருது"க்கள் என அழைத்துக்கொண்டதால், அவர்களது பாசைக்கே "உருது" زبانِ اُرْدُوئے مُعَلّٰی என பெயர் ஆனது. தமிழ்நாடு சர்க்கார் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 21. தக்காணி முஸ்லிம்கள் (25), முற்பட்டோர் பட்டியலில் 33.    காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721), 59.    பத்தான் (பட்டானி), கான் (747) எண்களில் வரும் ஜாதியினர்.

இஸ்லாமுக்கு முன்னரே இங்கு சங்க காலங்களிலிருந்து படைவீரர்களாக பணியாற்றிவந்த இவர்கள், பின்னாளில் இஸ்லாமிய ஆத்திகத்தை ஏற்றனர்.

நாத்திக இருள்களான அசுர ஜொராஸ்டிரியம், பௌத்தத்தை அழித்த கிழக்கு - திருஞானசம்பந்தரது ஆத்திகச் சைவமும் (ஸபியூன்), மேற்கு - முகமதுவின் மௌமீன் இஸ்லாமும் (620-630 CE)

கொங்கத்தில் சேரரிடத்தே பணி செய்த இந்த மிலேச்ச வீரர்கள் (circa 200 CE) பற்றி பத்துப்பாட்டு சொல்கிறது:

5. முல்லைப்பாட்டு - பாசறைக் காட்சி

புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இருப்பது முல்லைப் பாட்டு. இது ஓர் அகத்திணைப் பாட்டு - அதாவது பெயர் தெரியாத ஒரு தலைவன், தலைவி ஆகியோரிடையே உள்ள அன்புப்பிணைப்பைப் பற்றியது. அதில், முல்லை என்பது பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவியின் நிலையைக் கூறுவது. முல்லைப்பாட்டின் தலைவன் ஓர் அரசன். அவன் போர்மேல் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தில் கார்காலம் தொடங்கினால் போர் நிறுத்தப்பட்டு, இரு படையினரும் தத்தம் நாட்டுக்குத் திரும்புவர். காலையில் பயணம் தொடங்கினால் மாலைக்குள் வீடு வந்து சேருவர். ஒரு கார்காலத் தொடக்கத்து மாலை நேரத்தில் தலைவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலையுடன் காத்திருக்கும் தலைவியாகிய அரசியின் நிலையைக் காட்டும் வண்ணம் பாடல் தொடங்குகிறது. இதனைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் (103 அடிகள்)கொண்டது இப்பாடல்.

பாடலின் தொடக்கத்தில் பிரிவுத்துயரால் வாடும் தலைவியின் நிலையைக் காட்டிய புலவர், அடுத்து ஒரு பின்னோக்குக் காட்சியாக (Flash back), போர்மேற் சென்ற தலைவன் முதலில் தன் படைகளுக்கும், தனக்கும் பாசறை வீடுகளைக் கட்டிக்கொள்வதைக் காட்டுகிறார். இதில் மன்னனான தலைவனுக்குச் சிறப்பான முறையில் பலத்த கட்டுக்காவலுடன் பள்ளியறையுடன் கூடிய ஒரு படைவீடு மிலைச்சரால் சிறப்பாக அமைக்கப்படுவதைப் புலவர் நன்கு விரித்துக் கூறுகிறார்.

 1. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை

2. மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து

3. வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்

5. திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்

6. எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்

7. உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

8. படம் புகு மிலேச்சர் உழையர் ஆக - முல் 59 - 66

 1,2,3. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை,மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - கசை என்கிற சாட்டை சுற்றிய, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும், சட்டையையும் அணிந்த அச்சம் வரும் தோற்றத்தையும், வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

 4. புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் - புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரிப்பு சிறப்பாக அமையப்பெற்ற அழகிய நல்ல குடிலில்,

 5. திரு மணி விளக்கம் காட்டி - அழகுடைய மாணிக்க மணி விளக்கை எரியவைத்துத்,

5,6 திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் - திண்ணிய கயிற்றில் திரைச்சீலையை வளைத்த இரு அறைகள் உள்ள படுக்கை அறையுள்,

7,8 உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக -

உடம்பை ஆட்டிச் சைகையினால் பேசும், பேசாத நாவினையுடைய சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக -

பாசறையின் மற்ற பகுதிகளையெல்லாம் மன்னனின் படைவீரர் அமைக்க, மன்னன் தங்குமிடத்தை மட்டும் மிலேச்சர் கட்டினர் என்று புலவர் கூறுகிறார். 

இதே காலகட்டத்தில், சங்க கால மூவேந்தரது பெரும் எதிரியான சாக்கிய பௌத்த சாலிவாஹனனது பணியில் இருந்த மிலேச்ச உடை, குல்லா அணிந்த சாக்கிய பௌத்த வீரன் (நாகார்ஜுனகொண்டா, தற்போதைய ஆந்திரா):





1311இல் மாலிக் காபர் என்ற குஜராத்தி பேடி, இஸ்லாமுக்கு மதம்மாறி அலாவுதீன் கில்ஜியின் தளபதியாக தலைமலைக் கணவாய் வழியாக வந்தபோது, தமிழகத்தை ஒருகுடையின் கீழ் ஆண்ட பாண்டியர் படையில் 20,000 தென்னிந்திய இஸ்லாமியர் இருந்துள்ளனர் என்று அமீர் குஸ்ரௌ உள்ளிட்டோர் எழுத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்:


கில்ஜியின் நோக்கம் சமணத்தில் இருந்த தேவகிரி, வரங்கல், ஹொய்சலர்களை அடக்குவதே. ஆனால் தோற்ற சமண ஹொய்சலன் மாலிக் காபுரிடம் ஆசைகாட்டி சைவர்களான பாண்டியர் மீது படையெடுக்க அவனே அழைத்து வந்தான்.

ஆயினும் சேரமான் சைவத்திற்கு தானமாக அளித்த கொங்கத்திலும், தென் கர்நாடகத்திலும், கேரள, மலையாளத்திலும்  நேரடி இஸ்லாமிய ஆட்சிமுறை எப்போதுமே இருந்ததில்லை எனத்தனிச்சிறப்புப் பெற்றிருப்பினும்: https://konguhistory.blogspot.com/2007/09/blog-post.html?m=1, படைகளில் இவர்கள் பலர் கொங்கருக்காகப் போரிட்டு வீர மரணம் எய்தியும், ஒற்றறாகவும், இறை நேசர்களாக (ஔலியாக்களாக) மாந்திரீகங்கள் செய்தும் இறைநிலை அடைந்தனர். 



தீரன் சின்னமலையின் சுதந்திரப்போர் 1799-1801இலும் பதேஹ் முஹமத்

 فتح محمد, முஹமத் ஹாஷம் 

محمد ہاشم, ராமானுல்லாஹ் கான்   رامان اللہ خان ஆகியோர் கொங்கதேசத்தின் சுதந்திரப்படைகளின் தளபதிகளாக இருந்தனர்:https://archive.org/details/SouthIndianRebellion/page/n114/mode/1up

கோவை கூட்டணி தீரனுக்கும், சேலம் கூட்டணி பரமத்தி வேலூர் அப்பாச்சிக்கவுண்டருக்கும், திண்டுக்கல் கூட்டணி விருபாட்சி கோபால நாயக்கருக்கும் தென்னிந்திய விடுதலை வீரர்களுக்கும் இணைப்புப்பாலமாகச்  செயல்பட்டவர் தோண்டியா வாக் (எ) நவாப் மாலிக் ஜஹான் பஹாதுர் முன்ஷேர் கான்: 

نواب ملک جہاں بہادر منصیر خان

https://en.m.wikipedia.org/wiki/Dhondia_Wagh

மேற்கண்ட கூட்டணி பற்றி முனைவர் ராஜய்யன் கும்பினி Board of Revenue ஆவணங்களில் இருந்து எடுத்து எழுதிய நூலிலிருந்து:


https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

பிரான்சிஸ் புக்கனான் என்ற சமகால (1800) கும்பினியான் பயணக்குறிப்புகளில்:

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214

கொங்கர்தம் குலதெய்வங்களில் இஸ்லாமியரானவர்களில் முக்கியமானோர்:

  1. அப்பச்சிமார் படை வீரர் தனுக்காமன் (தானு கான்)
  2. அவரது சகோதரரான அப்பச்சிமார் படை வீரர் வாதுருகார் (பஹாதுர் கான்)
  3. தனுக்காமன், வாதுருகார் தாயாரான மாந்திரீகத்தில் சிறந்த மசரி அம்மன் (மஸரி)
  4. காகம், காஞ்சிகோயில் கன்ன கோத்திரத்தார் மற்றும் காஞ்சிகோயில் செம்ப கோத்திரத்தார் குலதெய்வமான டில்லி பட்டாணி துலுக்க ராவுத்தமார் சாமி
  5. ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்  துலுக்கண்ணன்
  6. பஞ்சாபி சிப்ரா ஜாட் ஜாதியில் பிறந்த டீபு சுல்தான் கொடுத்த 'ஆவ் ஜீ' மரியாதை
  7. காடையூர் சர்தார்
  8. அண்ணமார் காலத்து ராஜராஜ சோழன் படையில் பட்டாணியர்
  9. கொளாநெல்லி துலுக்கண சாமி
  10. வட்டூர் துலுக்கணர் சாமி
  11. பணிமலைக்காவலர் கோயில் பங்கடு சுல்தானும், துலுக்கப்பூசாரியும்
  12. கொங்கதேச குலகுரு மட ஏடுகளில் இஸ்லாமிய துஆ (வேண்டுதல்) யந்திர, மந்திர பூஜைகள்
  13. பன்றிக்கறியை 'முர்தார்' என்று விலக்கல்
இஸ்லாமியர் மதிக்கும் கொங்கர் கோயில்கள்:
  1. சேரமான் பெருமாள் நாயனார்
  2. பழனி பாவா, காளிப்பட்டி கந்தசாமி

    ஆகியோர்.


    1,2&3. மசரி அம்மன் (பேச்சி அம்மன்), தனுக்காமன், வாதுருகார்:

    திங்களூர் சின்ன அப்பிச்சிமார் மடத்தில் மசரி அம்மன் சன்னிதி
    பூசாரி: மடத்துப்பாளையம் காட்டு வேட்டுவக்கவுண்டர் (குலகுருவிடம் சிவாகமப்படி பூணூல், ஆச்சார்யாபிஷேகம் ஆனவர்)
    குருத்துவம்: பட்டையக்காளிபாளையம் மடம் (சைவப்பிள்ளைமார் தேசிக ஓதுவார்)


    சிங்காநல்லூர் பெரிய அப்பிச்சிமார் மடத்தில் மசரி அம்மன் சன்னிதி, பூசாரி: சிங்காநல்லூர் வேந்த வேட்டுவக்கவுண்டர் (குலகுருவிடம் சிவாகமப்படி பூணூல், ஆச்சார்யாபிஷேகம் ஆனவர்)

    குருத்துவம்: பட்டையக்காளிபாளையம் மடம் (சைவப்பிள்ளைமார் தேசிக ஓதுவார்










    வெள்ளோடு ராசா கோயில் மசரியம்மன் (வடக்கில் செங்கல் வைத்து அடைக்கப்பட்டுள்ள தனிவாசலுடன்)
    பூசாரி: வெள்ளோடு புலவர்பாளையம் தென்முகம் சாத்தந்தை கோத்திர சபைப் புலவனார்களில் அவர்களது குலகுரு கூனம்பட்டியிடம் உபதேசமானவர்கள்
    ஸ்தானிகம்: மூவேந்திர பண்டிதர்


    திடுமல் மசரியம்மன் (பேச்சியம்மன்)
    பூசாரி: காட்டு வேட்டுவக்கவுண்டர்
    குருத்துவம்: நஞ்சை இடையாறு மடம் (கிராமிய ஆதி சைவர்)

    மணியம்பாளையம் ராக்கியணன் கோயில் மசரி அம்மன் சன்னிதி தனிவாசலுடன், 

    பூசாரி: மின்ன வேட்டுவக்கவுண்டர்

    குருத்துவம்: பட்டையக்காளிபாளையம் மடம் (சைவப்பிள்ளைமார் தேசிக ஓதுவார்)

    இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டுப் பிள்ளைக்கரையாற்றூரில் அன்று புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர் சமூக வாலிப வயதுப் போராளிகள் , ஆவணிப்பேரூர் பூவாணிய நாட்டுப் பொத்தி என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டு கொங்க வெள்ளாள நாட்டுக்கவுண்டர்களுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் அருகே ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் வீர மா சதியாக (வீரமாத்தி) உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது. பூந்துறை நாட்டுக்கவுண்டர்களது மடாதிபதியான பாசூர் மடம், ராசாக்கோயில் பூசாரிகளது குலகுருவான கூனம்பட்டி மடம், வேட்டுவரது பட்டையக்காளிபாளையம் மடம் ஆகியோரின் அறிவுரைப்படி இஸ்லாமிய ஔலியாவான மசரியும், மகன்களும் சிவ - யாமள ஆகமங்களின்படி கோயில் அமைக்கப்பட்டு அதில் வணங்கப்படுகின்றனர். மசரி கொற்றவையின் அம்சமாகவும், மகன்களும் அப்பிச்சிமாரும் முருகனது அம்சங்களாகவும், அர்த்தநாரீசரை இவர்கள் அடைந்த வழியாகவும் கொள்ளப்படுகிறாள். இஸ்லாமியர் அல்லாஹுவை அடைய வலியுல்லாஹ்வாகப் பார்க்கின்றனர்.

    நவி(பி) - முகமது நபி குலத்தில் (இஸ்லாமில் ) தோன்றி, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா-- பலுசிஸ்தான் -அப்கானிஸ்தானிலிருந்து (கான் ஜாதிப்பெயர் கொண்ட பட்டாணியர்) பல தேசங்கள் கடந்து தெக்காணத்தில் (தக்கணி இஸ்லாமியர்) வந்தவர்கள்  என்பதற்கான இலக்கிய ஆதாரம்

    மசரி مصری என்ற இசுலாமிய பெண்ணின் மகன்களான தனுக்காமன் ( تعانق خان, தானு கான்), வாதுருகார் (بہادر خانபஹாதுர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர்.

    தென்முகம் வெள்ளோடு ராசா சுவாமி கோயில் மற்றும் சிங்காநல்லூர், திங்களுர், திடுமல் அப்பிச்சிமார் மடங்களில் மசரி அம்மன் பேய்களை ஓட்டும் மாந்திரீகத்தில் சிறந்தவளாகவும், மக்கள் இருவரும் சேர்த்து வணங்கப்படுகின்றனர்.

    எழுபது வேட்டுவர்களும், அவர்கள் தகப்பன்மாரான அப்பிச்சிமாரும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களது தாயான மசரி அம்மனுக்குத் தனியாக ஆடு, சேவல் மிருகபலி கொடுக்கப்படுகிறது.

    கொங்க வெள்ளாளரில் மேல்கரைப் பூந்துரை நாட்டார், காஞ்சிக்கோயில் மொளசி கன்ன கோத்திர நாட்டார்,  பெருந்தாலி வேட்டுவர் மற்றும் பல சமூகத்தினர் குலதெய்வங்களாக இவர்கள் உள்ளனர். அப்பிச்சிக்கவுண்டர், மாரப்பகவுண்டர், ராக்கியணக்கவுண்டர், மாராயி, மசரி என்று பெயரும் இடுகின்றனர். இஸ்லாமியரும் 'ஔலியா' என்று வெளியில் நின்று தொழுகின்றனர்.

    அப்பிச்சிமார் காவியம்:

    https://archive.org/details/20241109_20241109_1134

    https://appichimarhistory.blogspot.com/2021/01/blog-post.html?m=1


    4. ராவுத்தமார் சாமி

    காஞ்சிக்கோயில் நாட்டாரான செட்டிபாளையம் செம்ப கோத்திரத்தாரும், காஞ்சிகோயில் கன்ன கோத்திரத்தாரும் 

    போரில் ஒட்டுமொத்தமாக இறந்துவிட, இறைவன் அருளால் டில்லிப் பட்டாணி துலுக்க ராவுத்தர் دہلی پٹھانی  ترك  راوت தோன்றி புகை போட்டு அவர்களை எழுப்பி வெற்றி பெறச்செய்தார். "பச்சைத்துலுக்கன் பட்டாணி ராவுத்தன்" என்றும் சொல்கின்றனர்.


    அவருக்காக காகத்தில் கன்ன கோத்திரத்தார் ஒரு கோயிலும், காஞ்சிகோயிலில் நாட்டுக்கவுண்டரான செட்டிபாளையம் செம்ப கோத்திரத்தார் தனியே ஒன்றும், காஞ்சிகோயில் நாட்டுக்கவுண்டரா  கன்ன கோத்திரத்தார் பள்ளபாளையத்தில் ஒன்றும் என மூன்று ராவுத்தமார் கோயில்கள் குலதெய்வங்களாக உள்ளன. நாட்டுப்பட்டக்காரரான செட்டிபாளையத்தார் வீட்டில் பேழையில் சாமி வைக்கப்பட்டு, வருடம் ஒருமுறை காஞ்சிகோயில் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இன்று அதனை அங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டனர். 





    பூசாரி: காஞ்சிக்கோயில் செட்டிபாளையம் செம்ப கோத்திரத்தார்
    குருத்துவம்: சிவகிரி மடம் (கிராமிய ஆதிசைவர்)



    காஞ்சிக்கோயில் நாட்டுக்கவுண்டரான கன்ன கோத்திரத்தார்  பள்ளபாளையம் ராவுத்தமார் கோயில்
    பூசாரி: காஞ்சிக்கோயில் பள்ளபாளையம் கன்ன கோத்திரத்தார்
    குருத்துவம்: சிவகிரி மடம் (கிராமிய ஆதிசைவர்)

    ராவுத்தருக்கு கஞ்சா புகை (தற்போது சுருட்டாக மாற்றியுள்ளனர்), பட்டை சாராயம் (தற்போது TASMAC IMFLஆக மாற்றம்), ஆடு, கோழி படைக்கப்படுகின்றன.

    ராவுத்தாக் கவுண்டர், ராவுத்தண கவுண்டர், ராவுத்தாயி என்று பெயர்கள் இட்டும் வருகின்றனர்.

    காகம் கன்ன கோத்திரக் கவுண்டர்களது மடாதிபதியான பாசூர் சின்ன மடம்,  காஞ்சிக்கோயில் நாட்டுக்கவுண்டர்களது சிவகிரி மடம் ஆகியோரின் அறிவுரைப்படி இஸலாமிய ஔலியாவான ராவுத்தமார், சிவ ஆகமப்படி கோயில் அமைக்கப்பட்டு அதில் சிவனையடைய வழியான முருகனது அவதாரமாக வணங்கப்படுகின்றனர். இஸ்லாமியர் அல்லாஹுவை அடைய வலியுல்லாஹ்வாகப் பார்க்கின்றனர்.







    காகம் ராவுத்தமார் கோயில்
    பூசாரி: காகம் கன்ன கோத்திரத்தார்
    ஸ்தானிகர்: காகம் கிராமிய ஆதிசைவர்
    புகைப்படங்கள் மற்றும் செய்தி:

    https://www.thehindu.com/society/history-and-culture/a-secular-temple-in-the-heart-of-kongu-nadu/article24103046.ece/amp/


    5. துலுக்கண்ணன் வம்சம்



    ராசிபுரம் அத்தனூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோயிலில் அம்மனுக்குத் தலைவணங்கி, தலையில் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது துலுக்கண்ணன் அளித்த அம்மன் குதிரை வாகனம்

    பூசாரி: சோழிய வெள்ளாள புலவனார்
    ஸ்தானிகம்: கல்லங்குளம் மடம், சிவாலய ஆதிசைவர் (கிராமிய ஆதி சைவர்கள்)

    வல்வில் ஓரி வம்சமான ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்களது முன்னோர்கள் ஒருவரது குழந்தையை, குழந்தையில்லாத  இஸ்லாமிய அதிகாரி தத்து எடுத்து வளர்த்தார். துலுக்கரை ஸ்வீகார அண்ணனாகக் (தந்தையாக) கொண்டதால் துலுக்கண்ணன் வம்சம் எனப்பெயர் பெற்றனர். 


    6. 'ஆவ் ஜீ', 


    டீபு சுல்தான் 
     سلطان  فتح علی صاحب ٹیپو"ஆவ் ஜீ" என்று அழைத்தது, இன்றுவரை பட்டப்பெயராகப் பத்திரிக்கைகளிலும் "ஆவுச்சி" எனத்தொடர்கிறது.

    ராசிபுர நாட்டுக்கவுண்டரான வெளிய கோத்திரத்து அகளங்க பட்டக்காரரது தம்பி ஒருவர், பருத்திப்பள்ளி செல்ல கோத்திர நாட்டுக்கவுண்டரான முதலிக்கவுண்ட பட்டக்காரர் மகளை கல்யாணம் செய்தார். அவருக்கு மாமனார் தனது நாட்டில் ஒரு பகுதியை 'மல்லசமுத்திரம் நாடு - மல்லை நாடு' எனப் பிரித்து வழங்கினார். மருமகன் வீரதீரங்களால் 'தொண்டைமான்' எனப் பட்டம் பெற்றார். அப்போது வேட்டுவர் ஒருவர் தனது கொடியை நட்டார். உடனே மூத்தவரான ராசிபுரத்தாரிடம் தம்பி உதவி கோர, அவர் வேட்டுவரை தோற்கடித்து, ரத்தம் சொட்டச்சொட்ட தங்கள் இருவருக்கும் நடுவில் பிடித்து டீபுவிடம் அழைத்துச்சென்றனர்.  பஞ்சாபி சிப்ரா ஜாட் ஜாதி இஸ்லாமியரான டீபு சுல்தான், நாட்டு அதிகாரிகளாக இருந்த ராசிபுரத்தாரின் வீரத்தை மெச்சி, எழுந்து நின்று, இவர்களை மட்டும் உருதுவில் "ஆவ்" آؤ (வா) என்று பிறரை அழைப்பது போல அழைக்காமல், "ஆவ் ஜீ" آؤ جی  (வாங்கோ)



    என்று மரியாதையுடன் அழைத்ததால், இன்றும் இக்கோத்திரத்தாரைப் பிறர் "ஆவுச்சி" ஏன்றே அழைக்கின்றனர். மேல்கரைப் பூந்துறைக் கிளை நாட்டார், நற்குடி 8000 நாட்டார் ஆகியோது நாடுகளுக்கு, சாக்கிய யூத அமைப்பான பிரெஞ்சு ஓரியன்டல் ஜெகாபின் பிரீமேசன் கிளப் அடிமை  டீபுவிடம் உண்டான பகையால் பல கோயில்கள் இடிக்கப்பட்டு (உதா: எழுமாத்தூர் அவலூர் பட்டீஶ்வரர்) பதவிகள் ஒழிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாகினும், எழுகரை நாட்டாரில் மேற்கண்டோர் நல்லுறவில் இருந்துள்ளனர்.

    7. காடையூர் சர்தார்:







    காடையீஶ்வரர் கோயிலில் உள்ள வரலாற்றுப் பதிவுகள்
    குருத்துவம்: காடையூர் மடம் (கிராமிய ஆதிசைவர்)

    தங்களது முப்பாட்டி பத்தினி வெள்ளையம்மாளை கேவலப்படுத்தி ஏமாற்ற நினைத்த அவளது பிறந்த வீட்டாரான நட்டூர் சேட கோத்திரத்தாரிடம் நியாயம் கேட்க உதவிய சர்தாருக்கு سردار நன்றிக்கடனாக, காடையூர் பிறழந்தை கோத்திர காங்கய நாட்டுக்கவுண்டர்கள், இன்றும் இஸ்லாமிய சுன்னத் போன்று "முழுக்காது சீர்" என்ற காதுகுத்து சீரினை குலகுரு ஆலோசனைப்படி நடத்துகின்றனர். இதனால், அக்குலத்தவரே முழுக்காதர் என்றழைக்கப்படுகின்றனர். இந்தச்சீர் செய்தவர் அனைவரும் அருமைச்சீர் வைத்தவர்களாகக் கருதப்படுவர். தெற்கு, மேற்குத்தலைவாசல் ஆறு நாடுகளில், இந்த காடையூர் முழுக்காது பெறழந்தை கோத்திரத்தார் மட்டுமே அருமைக்காரர்களாகத் தகுதியுள்ளோராவர்.

    நடிகர் சிவகுமார் குடும்பத்தார், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவரும் இவ்வாறு இஸ்லாமிய சர்தாருக்கு நன்றிக்கடனாக, அவர் நினைவாக சுன்னத் சீரைத் தழுவிய முழுக்காது சீர் செய்தவர்களாவர்.


    8. அண்ணாமார் காலத்து ராஜராஜ சோழன் படையில் பட்டாணி ராவுத்தர்



    சிவசோழன் (ராஜராஜன்) படையிலும் "பட்டாணி ராவுத்தன்மார்" போர்த் தளபதிகளாக, வீரர்களாக பணியாற்றியதாக அண்ணமார் சுவாமி கதை தெரிவிக்கிறது.

    https://archive.org/details/AnnamarswamiKathai/page/n90/mode/1up?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF

    9. கொளாநல்லி துலுக்கண சாமி
    கொளாநல்லி பொன் குழலி அம்மன் கோயில் கருப்பண சாமி சன்னிதி அருகே துலுக்கண சாமி சன்னிதி


    பூசாரி: கொங்க கோரக்க வம்ச பண்டாரம்

    கொளாநல்லி கன்ன கோத்திரத்தாருக்கு ஒரு இஸ்லாமியர் பேருதவி செய்ததால், அவரைத் 'துலுக்கண சாமி' என்று வணங்கி வருகின்றனர். 'துலுக்கண கவுண்டர்' எனப்பெயரும் இடுகின்றனர்.
     (ஆதாரங்கள் : 1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.
    2. கொங்குநாடு (1934) தி.சு.முத்துசாமிக் கோனார், பக்கம்-90.)


    10. வட்டூர் கவுண்டம்பாளையம் துலுக்கணர் சாமி

    வட்டூர் கவுண்டம்பாளையத்திலும் ஒரு துலுக்கணர் சாமி 

    வட்டூர் கவுண்டம்பாளையத்திலும் ஒரு துலுக்கணர் சாமி அருள் பாலிக்கிறார்.


    11. திருச்செங்கோடு பணிமலைக்காவலர் 
    கோயில் பங்கடு சுல்தானும், துலுக்கப் பூசாரியும்

    திருச்செங்கோடு பணிமலைக்காவலர் கோயில்

    பூசாரி: திருவாடுதுறை ஶ்ரீ கருணீகர்

    திருச்செங்கோடு கோயிலைத் தாக்க வந்த படைகளை, ஓவணன், வீமணன், ரங்கணன் என மூவர் காத்து நின்றனர். இவர்களிடம் தோற்ற பங்கடு சுல்தான், சரணடைந்து அங்கு சமாதியாக உள்ளார். இவர் பாண்டியரைத் துரத்திவிட்டு மதுரையை கைபற்றிய மாலிக் காபுர் அமரவைத்த வம்சாவளியா மதுரை சுல்தானான ஃபக்ரூதின் முபாரக் ஷாவாக இருக்கலாம் (CE 1358–1368) என்பது என் கருத்து. ஓவணன், வீமணன், ரங்கணன் ஆகியோர் விஜயநகர குமார கம்பணன் வகையறாவாக இருந்திருக்க வேண்டும். முத்துசாமிக் கோனார் கருத்தின்படி நாகம நாயக்கன் காலத்து வேட கம்பளத்துப்  படையாகவும் (3 பழனி பகுதி பாளையப்பட்டினர்) இருந்திருக்கலாம். ஆனாலும் சுல்தான் என்ற பெயர் பொருந்தி வரவில்லை. கன்னிவாடி, கண்ணனூர், பழமடம் காணி கன்ன கோத்திரத்தாருக்குக் கட்டளைப் பூசாரியான இக்கோயில் பூசாரிக்கே ஏறருள்முத்து துலுக்கப்பூசாரி என்று பெயர் வந்தது. இஸ்லாமியரும் இந்த சமாதியை ஒரு 'ஔலியா'வாக மதித்துத் தொழுகின்றனர். (ஆதாரம்: பணிமலைக்காவலர் பட்டயம், கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், 2005, புலவர் செ.ராசு)

    முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:

    திருப்பரங்குன்று - மதுரை சுல்தான் சிக்கந்தர் மலை (களப்பிரர் கால சமண அஷ்டகிரி பரங்குன்று மலை) போன்று
    இதேபோலத் திருப்பரங்குன்றம் பின்னால் தற்போதைய தீபத்தூண் படக்கட்டுப் பள்ளத்தாக்கு, அதன் பின்னால் இருப்பது சமணர் களப்பிரர் காலத்தில் கைபற்றிய அஷ்டகிரி மலையான பரங்குன்று (பிற்காலத்தில் லுக்மான் ஷரீஃப் தர்கா, பின்னர் சிக்கந்தர் தர்கா). இதில்தான் ஃபகருதீன் சுல்தானது கடைசிப் பேரன் சிக்கந்தர் கொல்லப்பட்டு ஏற்கனவே லுக்மான் ஷரீஃப் தர்காவாக மாற்றப்பட்டு இருந்த சமணப்பள்ளியில் புதைக்கப்பட்டார்:

    620 வரை பரங்குன்ற அஷ்டகிரி சமணப்பள்ளி
    660க்குப்பின் லுக்மான் ஷரீஃப் தர்கா
    1380க்குப்பின் சிக்கந்தர் தர்கா
    இப்படி பின்புற மலை மாறியுள்ளது

    படைவீடு, சமணர்-முஸ்லிம் மலை இரண்டும் வெவ்வேறு, அடுத்தடுத்தவை. Scythian Saka சமணன் களப்பிரர் காலத்தில் (78 CEக்கு முன்) வந்தவன் மிலேச்சப்படை என்று முவேந்தர்களிடம் கூலிப்படையாக இருந்தவனுக்கும்,

    அவனது ரத்த சொந்தமான அப்கான் சாக்கியன் (Pathan) பட்டாணி இஸ்லாமுக்கு மாறி இங்கு வந்த டெல்லி சுல்தானுக்கும்
    நடந்த போர்தான் சமணர் அஷ்டகிரி பரங்குன்று vs சிக்கந்தர் மலை பிரச்சனை.

    சமணர் விளக்குத்தூண் ஒன்றும் மலையில் அருகில் உள்ளது. 1400களில் தில்லி சுல்தான் வழி மதுரை சுல்தானால் தர்காவாக மாற்றப்பட்டபோது தூணுக்கு வேலையில்லாமல் போனது. 


    சாக்கிய பௌத்த சமணரும், பின்னர் வந்த தில்லி சுல்தான் பட்டணியரும் ஒரே ரத்தம், நம் நாட்டில் உள்ள அக்ரஹார பிராமணர்களான சங்கர மடத்தார், ராமானுஜ மதத்தார், மாத்வ மதத்தாரும் அதே சமண, பௌத்தரான சாக்கிய வம்சாவளிகள்தான். இனம் ஆனால் மதங்கள் வேறு: http://kongukulagurus.blogspot.com/2009/09/blog-post.html

    சமண சீவக சிந்தாமணியில், கார்த்திகை தீபத்தின் சிறப்பை விளக்கும் வகையில், "குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்" என்று குறிப்பிட்டுள்ளது.

    இன்றும் சமணர் கோயிலான ஈரோடு விஜயமங்கலம் சந்திரபிரப அருகன் பள்ளியில் தீபத்தூண் ஏற்றப்படுகிறது.



    12. கொங்கதேச குலகுரு மட ஏடுகளில் இஸ்லாமிய துஆ (வேண்டுதல்) யந்திர, மந்திர பூஜைகள்:

    கொங்கதேச குலகுரு ஒருவரது பண்டைய ஓலைச்சுவடியில் உள்ள ஒரு வேண்டுதலின் (துஆ) பகுதி:
    "யிண்ணாக்குத்திகுதயினா சல்லில்லாகித்தாலா பாதலபளத்துப்புணியிலாம்

    சல்லல்லாகுஆகுலக்கிசல்லம்
    சயிதுநாநபியிணா
    முகுலாணவலாலி முகமம்து"

    யிதுக்கு மூல தியானம்:
    "சுபுகாண் அல்லா"  (سُـبْحانَ الله) யெண்று ௧ள௫ (105) முடியவும் யிதுக்கு உரு

    என்று இஸ்லாமிய யந்திரம் (தாவீஜ் நக்ஷ்)نقش
     تعويذة ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதற்கு உரு (திக்ர் ذِكْر) முறையும், பூஜை முறைகளும் போடப்பட்டுள்ளன.

    இது போன்று பிறவும் உள்ளன.

    13. பன்றிக்கறியை 'முர்தார்' என்று விலக்கல்:

    பூந்துறை, எழுகரைநாடுகளது கவுண்டர்களது சில கோயில்களில் பன்றி பலி இருப்பினும், அவர்கள் அதனை 'முர்தார்' (சுருக்கம்: முருவம்) என்ற வர்த்தையைச் சொல்லி உண்பதில்லை. முர்தார் (مُرْدار) என்ற உருது வழியிலான பாரசீகச்சொல் உண்பதிலிருந்து விலக்கப்பட்டது என்ற பொருளுடையது ஆகும். படைகளிலிருந்த மசரி, ராவுத்தமார் முதலான உருது பேசும் இஸ்லாமியர் வழியாக இவ்வழக்கு பரவியுள்ளது என்பது தெளிவு.

    1. சேரமான் பெருமாள் நாயனார்


    சேரமான் கயிலை செல்லல் - தஞ்சை பெரிய கோயில் சோழர் ஓவியம்

    சேரமான் பெருமாள் நாயனார் தனது கொங்கதேசத்தை கரூவூரிலிருந்து ஆண்டார். இறுதியில் பூந்துறையில் தனது நாட்டினை சுந்தரருக்கு அளித்து கயிலை சென்றார். பூந்துறையில் சாகாடை கோத்திரத்தில் தனது பிரதானியாக இருந்த நன்னாவுடையானை http://kongupattakarars.blogspot.com/2011/03/1.html?m=1 கொங்கதேசத்தின் தலைமைப் பட்டக்காரராகவும், அதேபோல அவரது வம்சத்தில் வந்த 'பூந்துறைக்கோன்' ஸ்வாமி திரி திருமூலப்பாடு குன்றலைக்கோனாத்திரி  https://en.m.wikipedia.org/wiki/Zamorin#Etymology என்பவரை மலையாள, கேரள தேசங்களுக்குத் தலைமை சாமந்தனாகவும் பட்டம் சூட்டிச்சென்றார். சுந்தரரும் ஆதி சைவருக்கு அளித்துத் தொடர்ந்தார். மலையாள இஸ்லாமியர், அவர் மெக்காவை அடைந்ததாகக் கொள்கின்றனர். குக்குடேச் சுர மக்கீச்சுரம் 6-71-8 என்று அகர வரிசை தேவார வைப்புத்தலங்களில் 232வது தலமாப் பாடப்பெற்றுள்ளதனை ஒப்பு நோக்குக: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0196.html#dt6071

    ஆறாம் திருமுறை:

    6.71 பொருப்பள்ளி வரைவில்லாப்

    நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்

    சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான

    கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்

    குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்

    ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்

    அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்

    ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்திஇ

    றைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.   8 

    இதனைக் கட்டியது து அல் கர்னைன் என்று சாக்கியர்களை வெல்ல பெருஞ்சுவர்  எழுப்பிய மாமன்னன் என்கிறது குரான். அது நமது விக்கிரமாதித்த சாகாரி தான்:

    https://en.m.wikipedia.org/wiki/Dhu_al-Qarnayn

    பாரத வர்ஷத்தைக் கைபற்றிய யவன நாத்திக (காஃபிரான) சாக்கிய சமண மிலேச்சரான மோரியரை வீழ்த்த, மால்யவத் என்ற சிவகனத்தை ஈசன் விக்கிரமார்க்கனாகப் படைத்தார். வேதாளம் ஈசன் ஆணைப்படி அவனை நரபலியாக்கி வித்தியாதரப் பதவிக்கு முயன்ற க்ஷாந்திசீல சமண பிட்சுவைப்பற்றிய ரகசியங்களை அவனிடம் சொல்ல, விக்கிரமார்க்கன் அச்சமணனையே நரபலியாக்கி வித்தியாதரப் பதவியடைந்தான். மேலும் 56 BCEயில் உஜ்ஜயினி மாகாளி அருளால் விக்கிரமன் (சுங்க வம்ச மன்னன்) பட்டம் ஏற்று சாக்கிய சமணர்களை விரட்டினான். சமயபுரம் மாகாளிக்குடியில் இவர்களுக்குக் கோயில் உள்ளது. இவ்விக்கிரமார்க்கனே மக்கீச்சரம் என்று அப்பர் பின்னாளில் பாடிய மெக்காவை யஜூஜ் வ மஜூஜ் எனும் சாக்கியர்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுப் பெருஞ்சுவர் எழுப்பி அவர்களைத் தடுத்த குரான் கூறும் துல்கர்னைன் ஆவான். விக்கிரமாதித்த சாகாரியின் வேதாளக் கதைகள்:  https://archive.org/details/tva-bok-0007179

    சேரமான் கயிலை அடைந்ததனை அன்று ஏமன் நாட்டு வணிகர்களாக மலையாளத்தில் இருந்த சோனக ஷாஅஃபி மத்ஹப் பரேல்வி (ஜமாத் அஹ்லே சுன்னத் جماعت اہلِ سنت) மாப்பிள்ளை இஸ்லாமியர்,  மக்காவை அடைந்ததாகவே போற்றுகின்றனர். மக்கீச்சரத்தை அப்பர் போன்று சேரமானும் சக ஆத்திகர்களது சிவாலயமாக மதித்துள்ளார். மேலும் தங்களுக்கென சேரமான் ஒரு பள்ளிவாசலை மலையாள ஆகம கட்டிடக்கலைப்படி கட்டிக்கொடுத்ததாகப் பெருமையுடன் காட்டுகின்றனர்:

    சேரமான் பெருமாள் பள்ளிவாசல் (பழைய படம்)

    கயிலையையும் மக்காவையும் தேவார அப்பர் சுவாமிகளும், மலையாளச் சோனக மாப்பிள்ளை இஸ்லாமியரும் இறைவனின் இருப்பிடங்களாக வேறுபாடுகள் இன்றிப் போற்றியுள்ளனர்.

    ஏமன் நாட்டிற்கு ஷாஅஃபி أَبُو عَبْدِ ٱللهِ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ ٱلشَّافِعِيُّ காலத்தில் ஷாஅஃபி மத்ஹப் பரப்பிய காலம்: 767 - 820 கிறித்தவ வருடம்

    https://en.m.wikipedia.org/wiki/Al-Shafi%27i

     சேரமான் காலம்: 825 கிறித்தவ வருடம்

    கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்

    கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்

    லைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை

    மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே

    வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

    (கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே கருதினர் . கொங்கு நாடு தான் சேர நாடு

    'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,
    ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா
    ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே.'

     - (திருப்புகழ் - பழநி) 

    அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் . கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.


     14. இப்ராஹீமின் சுரா

    4:14 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
    14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவரவர் மொழியிலேயே போதிக்கும் படி நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

    "ஆதியாகி அந்தம் நடுவாகி அல்லானே"

    "அன்பருக்கன்பனே யாவையுமாம் அல்லையுமாம்" 

    - மாணிக்கவாசகர் சிவபுராணம்

    இறைவனின் அரு உருவை "அல்லான்", "அல்லை" என்பதனை நோக்குக. இஸ்லாமியர் வடிவற்ற இறைவனை அல்லாஹ் என்பதனையும் நோக்குக.

    ஔலியாக்கள் சிவபெருமானையும், அவர் கண்களான சூரிய சந்திரனையும் தங்களது அல்லாஹுவுக்கான ஃபாத்திஹாக்களில் வைத்திருந்ததனை ஒப்புகொண்டார், கெஃபியா அணிந்த நஜ்தி வஹாபி ஃபித்னாவாதிகளது தர்கா ஷிர்க் வலையில் விழுந்த  பழனி பாபா.
     (இந்த வஹாபிகள்தான் இஸ்லாமிய கலிஃபாக்களைச் சாக்கிய யூத அடிமையாகச் செயல்பட்டு 1924இல் ஒழித்தவர்கள்! சாக்கிய பௌத்த யூத RSSஇன் இஸ்லாமிய மாறுவேட ஜெராக்ஸ் காப்பிதான் இந்த யூத அடியாள் வன்முறை வஹாபியம். சாக்கிய பௌத்த யூத RSS, வஹாபிகளின் உலகமே பிரித்தாளும் துர்சக்திகளுக்கு ஏவலாளாக சதிச்செயல்கள் செய்வதுதான். ஆன்மீகத்திற்கான மதம் என்பதனை கைபற்றி அரசர்களை அழித்து, தங்கள் பொருளாதார தரகுக் கைப்பாவைகளை அமர வைப்பார்கள்)

     சிவனைக் காலகாலன் (காலமற்றவன்), த்ருதிமதே (நிலைத்த பொறுமையாளன்) என்பது போலவே குரான் அல்லாஹ்வை

     اَلصَّبُورُ அல்-சபூர் (காலமற்றவன்) என 99வது உச்சபட்சப்பெயராக வழங்குகிறது. சபூரை வணங்குவோர் சபியூன் எனச் சைவர்களுக்கு அரபியில் பொருளாகிறது.

    குரானிலும் சைவர்கள் பற்றி 'சப்யுன்' பற்றிக் குறிப்புகள் உள்ளன.

    https://kaabaasivalingam.blogspot.com/2025/08/blog-post.html



    இமய மலையின் மேற்கு எல்லையான கோராசான் பகுதியில் ஜன்னத் (சொர்க்கத்திலிருந்து) விழுந்ததான அஸ்வத் கல். சிவ லிங்கத்திற்குப் போலவே பாரம்பரிய பராமரிப்பாளர் குடும்பங்களால் அபிசேகம், தூபங்கள் செய்யப்படுகிறது. அல்லாஹ்வின் வலது பகுதி  (يمين الله யமீன்- (அர்-ரஹ்மான்) அல்லாஹ்) என முகமது நபி கூறியுள்ளார்:
     
    அஸ்வத் கல்லுக்கு எதிர்திசையில் உள்ள 
    ஆவுடையாரை ஒத்த சாஅத் கல்.

    காபாவை அப்பிரதட்சிணம் செய்கையில் உடுத்தப்படும் தைக்கப்படாத வேட்டி, துண்டு:


    குரான் சுரா: 2. பசு மாட்டின் சுரா வசனம்: 62

     اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

    2:62. இறை நம்பிக்கை  கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் (சைவர்கள்) நிச்சயமாக எவர் இறைவன் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு  நல்ல காரியங்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    குறிப்பு: ஸாபியீன் என்பார் இன்றைய ஏமன் நாட்டில் அல் மக்காஹ் என்ற சந்திரன்-காளை வாகனம் ஆகியவற்றை உடைய இறைவனை வணங்கியோர். https://en.m.wikipedia.org/wiki/Almaqah மக்காவில் உள்ள ஏமனி மூலை கல், இஸ்லாமில் பிறை ஆகியவை இவர்களில் இருந்து வந்தவை. முகமது நபியே தன்னை ஏமனி என்று கூறிக்கொள்வாராம். காரணம் பானு குவரெய்ஷ் என்ற நபியின் குடி ஏமனியர்கள் என்று மக்காவினரால் அறியப்பட்டார்கள். தமிழில் சோனகர் என்று ஏமனியர்கள் அறியப்பட்டனர்.

    https://muslimhands.ca/latest/2020/06/the-story-behind-iamyemeni#:~:text=Yemen%20in%20our%20History&text=The%20Quraysh%2C%20the%20tribe%20of,to%20the%20Prophet%20(saw).


    அல் மக்காஹ் ஸபியீன் கடவுளது கோயிலது எச்சங்கள்.

    மூஸா (மோசே) நபி காலம் வரை (பொ.கா.மு 12ஆம் நூற்றாண்டு) இஸ்ரேலிய சமாரியரால் இறைவனின் வடிவமாக வழிபடப்பட்ட முதுகில் திமில் உடைய காளை வாகனம் 


    அல் மக்காஹ் ஸபியீன் கடவுளது காளை வாகனம் (நந்தி)

    குரான் சுரா:  5. ஆகாரத்தின் சுரா  

    வசனம்: 69 

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِــٴُــوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

    5:69. ஓரிறையாளர்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும் (சைவர்கள்), கிறிஸ்தவர்களிலும் எவர்கள் இறைவன் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    குரான் சுரா:  22. புனிதப்பயணத்தின் சுரா 
    வசனம்: 17
      اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَ الصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا ۖ  اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏

    22:17. திடனாக, நம்பிக்கை கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும் (சைவன்களாகவும்), கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் (பாரசிக பூசாரி மதத்தவர்) ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக இறைவன் இறுதி நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.

    இதனால்தான் நாத்திகர்களான (காபிர்கள்) பௌத்த, சமணர்களை, ஜொராஸ்டிரியர்களைக் குறி வைத்து மாற்றிய இஸ்லாமிய அரசுகள், சைவர்களை ஆத்திக இறை சபியூன் என்ற இறை நம்பிக்கையாளர்கள் எனக்கருதினர். பாரம்பரிய ஹனஃபிக்களும், ஷியாக்களும் இன்றுவரை இதனைக் கடைபிடிக்கின்றனர்:
    யூதர், கிறித்தவருக்குப் போன்றே சைவர்களுக்குத் 'திம்மி' அந்தஸ்து அளித்து, ஜிஸியா வரி மட்டும் விதித்து கோயில்களில் உண்டியல் (ஹுண்டவி) வைத்தனர். சாக்கிய (யஜூஜ் வ மஜூஜ்) அடிமைகளான வளைகுடா வஹாபிகளும், RSSஉம் புதிதாக சைவர்களைக் காஃபிர் என்று இறை நம்பிக்கையாளர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

    2. பழனி பாவா


    முருகனின் ஷட்கோண சக்கர யந்திரம் - பானு இஸ்ராயிலது தாவூதின்  நட்சத்திரம்:

    பழனி மலை குருத்துவம்: தவராஜ பண்டிதர் (அலகு ஆதிசைவர்)
    ஸ்தானிகம்: 4 பட்டத்து அலகு ஆதிசைவர், புலிப்பாணி பாத்திர உடையார் மடம் (தொண்டை மண்டல வெள்ளாளர்)

    இதே போல பாரம்பரிய இஸ்லாமியராகிய பரேல்வி (ஜமாத் அஹ்லே சுன்னத் جماعت اہلِ سنت) இஸ்லாமியர்களும், ஷியாக்களும் (شيعة) பழனி முருகனைப் போற்றுகின்றனர்.  கோயிலுக்குப் பின்புறம் உள்ள சிறிய கதவிற்குள் உள்ள மண்டபத்தில் சர்க்கரை போட்டு இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றனர். இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்குப் "பழனி பாவா" என்று இறைவன் பெயரை சூட்டுகின்றனர். 

    தாவூத் நபியோடு http://hakkem.blogspot.com/2011/03/blog-post.html?m=1  பழனி முருகனும், அவன் வதைத்த தாரகாசுரன், ஜாலூத் ஒத்துப்போகின்றனர் என்பது எனது புரிதல்.

    "Curiously enough, Musalmans also believe in the efficacy of prayer to this shrine. Ravutans go to the little door at the back (east) of it and make their intercessions and offer sugar in the mantapam immediately inside this. They explain their action by saying that a Musalman fakir, called Palni Bava, is buried within the shrine." 

    மதுரை ஜில்லா கெஜட்டியர் (1906): https://archive.org/details/madurafrancis01madr/page/307/mode/1up
    பழனி முருகன் மீது இஸ்லாமியர் இயற்றிய இலக்கியங்கள்:

    பழனியாண்டவர் பாமாலை - புலவர் காதர் மொய்தீன் மஸ்தான்

    பழனியாண்டவர் வழிநடைச் சிந்து (1909) - தாராபுரம் என். காதர் முகைதீன் ராவுத்தர்

    பழனியாண்டவர் தல வரலாறு - என்.கே.முகம்மது ஷரீப்

    இது போன்றே பழனி முருகன் அருளும் காளிப்பட்டி கந்தசாமி கோயில் மீது பவானி ஜம்பை மஹமத்கனி ராவுத்தர் மகன் காசீம் சாயபு 'வழிநடைச் சிந்து' என்ற இலக்கியத்தை 1925ல் இயற்றியுள்ளார். (தகவல் & படம்: பாலமேடு ராஜா அவர்கள்): 






    நமது முன்னோர்களது இவ்வாறான கோயில்கள், அற நிலையங்களைப் பிரித்தாண்டு, தங்களது துப்பாக்கி போலீஸை வைத்துக் கொள்ளையடிக்கும் சாக்கிய பௌத்த-சமண-பார்சி-சாக்கிய யூத-கிறித்தவ நாத்திக உருவாக்கமான இண்டியா சர்க்கார், தற்போது இஸ்லாமிய அறநிலையங்களான வஃக்ப் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிக்க இறங்கியுள்ளது. நம்மை இதிலிருந்து திசை திருப்ப இஸ்ரேல் யூத அடிமை சௌதி வஹாபிகளும், இஸ்ரரேல் யூத அடிமை ஆர்.எஸ்.எஸ்உம் A டீம், B டீமாக நம்மைப் பிரித்தாள கலவரங்களை உண்டுசெய்வார்கள்.   இண்டியா சர்க்கார் அங்கமான டமில்நாடு சர்க்காரும் இதில் உடந்தை என்பதற்கு தியாகி ஷாஹீத் ஜாகிர் ஹுஸைன் மரணம் போன்றவை ஆதாரம்:
    ஆனால் மேலுள்ள பலிகளை மறுக்கும் நாத்திக மதங்களுக்கு மட்டும் இவ்வாறான கொள்ளைகளிலிருந்து பூரண சுதந்திரம்!
    இதனை மறைக்கத்தான் சர்க்கார் மதப்பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர். எப்போதெல்லாம் பட்டாணியர், சாக்கிய சமண கலப்பினத்தவரான 'ஹிண்டு' வட ஆரியர் - வடுகர் மீது வெற்றி கொண்டனரோ, அப்போதெல்லாம் சேரர் கொங்கதேசமும், நமது சைவ சித்தாந்த அகச்சமயமும் நிம்மதியாக இருந்தன. சாக்கிய, சமண ஹிண்டுக்களான வடவாரியர், வடுகர் வெற்றி, நமது அடிமைத்தனத்தில் முடிந்தது.

    பாரம்பரிய பரேல்வி சூஃபியான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடிய அகத்தியர் சதகம் காண்க.
    இதேபோல மனோன்மணிக்கண்ணி, நந்தீசர் சதகங்களும் பாடியுள்ளார்.
    உண்மையான ஆன்மீக இஸ்லாம். சாக்கிய யூத அடிமை சௌதி வஹாபிகளால் மறைக்கப்படுகிறது. இதேபோல் சாக்கிய பௌத்த RSSஆல் வேத ஆகம சைவ ஆன்மீகம் மறைக்கப்பட்டு சமூக சீர்குலைவு ஏற்படுத்தப்படுகிறது. குரானில் உணவுப்பந்தி சூராவில்:

    ۞ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْيَهُودَ وَٱلنَّصَـٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ ٥١ (சூரத்துல் மாயிதா 5:51)

    "இறை நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்."

    சிவாகமங்களில் நத்திகர்களான சமண பௌத்தரிடம் பழகாதீர். அவர்களைப் பார்ப்பதே அபசகுண காரியத்தடை என்கிறான் ஈசன்.

    மஸ்தான் சாஹிப் இறைவனை அடைய தனது நிஷ்டைக்கு அகத்தீசரது அருளை நாடுகிறார்.

    இதுபோல அகச்சமயமும், இஸ்லாமும் இறைவனை நோக்கிய ஆன்மீகப்பயணங்களே.

    ஆனால் இன்று சாக்கிய யூதனின் அடிமைகளான RSS- வஹாபி இரட்டைநாக்கு பாம்புகளால் உருத்தெரியாமல் அழிக்கப்படுகிறது:


    இஸ்ரேல் யூத பிரீமேசன் அடிமைகளான கலவர சங்கி-வஹாபிகள் நம்மைப் பிரித்தாள உருவாக்கும் இரு துருவ Aடீம் Bடீம் பசு மாட்டு பிரச்சனைகளுக்கான அகச்சமய - தவராத்/குரான்/ஹதீத் தெளிவு (கடைசி பார்க்கவும்):
    https://tamilnaducattle.blogspot.com/2025/06/blog-post.html









    Comments